உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சையில் நடந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்ட தீயணைப்பு வீரர்கள்.

தஞ்சையில் இன்று தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஓட்டம்

Published On 2023-04-15 09:20 GMT   |   Update On 2023-04-15 09:20 GMT
  • தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
  • விழிப்புணர்வு ஓட்டமானது ராமநாதன் ரவுண்டானா, வழியாக மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது.

தஞ்சாவூர்:

பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் 20-ந் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முதல் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாளான இன்று தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் உதவி மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நிலைய அலுவலர்கள் பொன்னுசாமி, பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டமானது பழைய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா, குந்தவை நாச்சியார் கல்லூரி, மேம்பாலம், பெரிய கோவில், ராஜ வீதிகள் வழியாக மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது.

செல்லும் வழியில் பொது மக்களுக்கு, தீ விபத்து நடைபெறாமல் தடுப்பது எப்படி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது எப்படி, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News