உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றிய 16 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Update: 2022-12-05 12:01 GMT
  • உரிமையாளர்களிடம் மீண்டும் இதுபோல் மாடுகளை சரிவர பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சாலைகளில் சரிவர பராமரிக்காத மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் சரிவர பராமரிக்காத மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை பிடித்து ஒரு இடத்தில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உரிமையாளர்களிடம் மீண்டும் இதுபோல் மாடுகளை சரிவர பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஒரு மாட்டிற்கு 500 ரூபாய் வீதம் அபராதம் வீதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ. 8 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

Similar News