உள்ளூர் செய்திகள்

பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-21 10:00 GMT   |   Update On 2023-03-21 10:00 GMT
  • பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணாபுரம்,

பால் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பைநல்லூர் அருகே உள்ள திப்பம்பட்டி கூட்ரோட்டில் பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் இந்த விலை உயர்வை தாமதம் இன்றி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செந்தில்குமார், மாநில செயலாளர் சின்னசாமி, டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தருமபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மேலும் தமிழக விவசாய சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், சிவலிங்கம், ராஜா , நாகராஜ், சுப்பிரமணியன், லோகநாதன், குமார்,யு.பழனி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய நிர்வாகி முனுசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News