உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

விவசாய நிலத்துக்குச் செல்லும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

Published On 2023-11-21 07:01 GMT   |   Update On 2023-11-21 07:01 GMT
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தை ச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் கிராம எல்லையில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் ஏரியில் ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் பொதுப் பாதையை அகற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News