உள்ளூர் செய்திகள்

தென்னை மரத்தின் குத்தகை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

Published On 2023-01-13 07:26 GMT   |   Update On 2023-01-13 07:26 GMT
  • ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும்.
  • கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா

மணியனூர், கந்தம்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிபாளையம், சோழசிரா மணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், திகவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், இருக்கூர், கொந்தளம், கோப்பணம் பாளையம், வெங்கரை, பாண்ட மங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், பரமத்தி, மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மர சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும். அப்போது விவசாயிகள் தென்னை மர குத்தகைக்காரர்களுக்கும், தேங்காய் மண்டி உரிமையாளர்களுக்கும் மர எண்ணிக்கையில் குத்தகைக்கு விடுவது வழக்கம். ஒரு மரத்துக்கு எவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து மொத்தமாக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார்கள்.

கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து பருவமழை பெய்ததால் தென்னை மரத்தில் காய்கள் அதிக விளைச்சல் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பை மற்றும் வெளிமாநில, வெளி மாவட்டத்திற்கு செல்லும் தேங்காய்கள் விலை குறைந்து விற்பனையாவதால் குத்தகைகாரர்கள் மற்றும் தனியார் தேங்காய் மண்டி வியாபாரிகள் தென்னை மர குத்தகையை விலை குறைத்து விட்டனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News