உள்ளூர் செய்திகள்

சந்தன மரம் வெட்டிய 4 பேருக்கு ரூ.2 லட்சத்து அபராதம்

Published On 2022-10-19 15:01 IST   |   Update On 2022-10-19 15:01:00 IST
  • குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. சந்தன மரம் வெட்டிய நபர்கள் யார் என வனச்சரகர் தினேஷ் தலை மையில் வனத்துறையினர் ரகசிய ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில் கேர்மாளம் அருகே உள்ள கானாகரை கிராமத்தை சேர்ந்த ஜடைசாமி (35), முருகேஷ் (32), மகாதேவா (48) மற்றும் கர்நாடக மாநிலம் எத்தே கவுடண்தொட்டியை சேர்ந்த மாதேகவுடா (45) என 4 பேரும் சந்தன மரம் வெட்டியது தெரிய வந்தது.


அவர்களை பிடித்து விசாரணை மேற்கொ ண்டதில் 4 பேரும் சந்தன மரம் வெட்டியதை ஒப்பு க்கொண்டனர். பின்னர் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவில் 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 40 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News