உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மனுதாரரிடம் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

Published On 2023-05-12 14:47 IST   |   Update On 2023-05-12 14:47:00 IST
  • பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
  • ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர்.

பவானி:

பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள புகார்தாரர்கள் இரு தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வழக்குகளை முடிக்க ஆவண செய்யும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முகாமில் கணவன்-மனைவி பிரச்சனை, நில பிரச்சனை, தகராறு உள்பட 6 மனுக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த 6 மனுக்களையும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஒவ்வொரு மனுதாரர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர். மற்ற 5 மனுதாரர்களும் கோர்ட்டு வழக்கு மூலம் தீர்வு கொள்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News