உள்ளூர் செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா மகா தரிசனத்தில் முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி அருள்பாலித்தார்.
பங்குனி உத்திர விழா நிறைவு மகா தரிசனம்
- பங்குனி உத்திர திருவிழாவில் மகா தரிசனம் நடந்தது.
- பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் மகா தரிசனம் நடந்தது.
இதை தொடர்ந்து சென்னிமலை கைலாச நாதர் கோவிலில் முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி பல்வேறு ஹோம திரவிங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடந்தது. டவுன் நான்கு ராஜா வீதிகளில் சாமி உலா வந்து கைலாசநாதர் கோவிலை அடைந்தது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது.