உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி

Published On 2023-04-15 09:35 GMT   |   Update On 2023-04-15 09:35 GMT
  • 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.
  • அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டியில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று இரவு ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

இதேபோல் நேற்று முன்தினம் அருகில் உள்ள செந்தில்குமார் என்பவரின் 7 ஆடுகள் இதேபோல் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

அடுத்தடுத்து 2 நாட்களில் 11 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

இது குறித்து சித்தோடு போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்துகின்றனர்.

கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் கடித்ததா? அல்லது வேறு ஏதேனும் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. அப்போது வனத்துறையினர் கண்காணிப்பு கேமிரா பொறுத்தி கண்காணித்தனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராமத்தினர் கூறி இருந்தனர். ஆனால் கண்காணிப்பு கேமிராவில் அப்போது தெளிவான உருவம் பதிவாகவில்லை.

ஒரு மாத காலத்திற்கு பின் மீண்டும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News