உள்ளூர் செய்திகள்
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
- ஒசூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்பிரபுரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 40). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி மாலை இவர் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சிக்னல் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, துளசிராமன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.