உள்ளூர் செய்திகள்

அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவு - நடைப்பயிற்சி செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

Published On 2023-01-04 04:45 GMT   |   Update On 2023-01-04 04:45 GMT
  • திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அணைகள், குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை மூடு பனி காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே நடைபயிற்சி செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News