உள்ளூர் செய்திகள்

கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது

Published On 2023-11-08 15:29 IST   |   Update On 2023-11-08 15:29:00 IST
  • கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
  • லாரியுடன் 17 டன் அரிசி பறிமுதல்

ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது மேற்பார்வையில் ஓசூர் ராயக்கோட்டை சாலை, அசோகா பில்லர் ரிங்ரோடு அருகே, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், விழுப்புரம் பகுதியிலிருந்து 17 டன் ரேஷன் லாரி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அரிசி பாரத்துடன் லாரியை, பறிமுதல் செய்து, குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் ராம்கி (40) என்பவரை கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி லோடு, கிருஷ்ணகிரியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News