உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே நடுகுப்பம் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள முருங்கை.

மரக்காணம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்

Published On 2023-03-24 15:01 IST   |   Update On 2023-03-24 15:01:00 IST
  • விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம்.
  • குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

விழுப்புரம்:  

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கந்தாடு, நடுக்குப்பம், ஓவி பேர், அடசல், புதுப்பாக்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோன்ற விவசாய பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்நிலை யில் இப்பகுதியில் கடந்த பருவ மழையின் போது சராசரி மழை அளவை விட குறைந்த அளவில் மழை பொழிந்தது. இதனால் இங்குள்ள பெரும்பாலான நீர் நிலைகள் முற்றிலும் நிரம்ப வில்லை. இதன் காரணமாக தற்பொழுது பல நீர் நிலைகள் வறண்டு வரும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விலை நிலங்க ளில் குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய முருங்கையை சொட்டு நீர் பாசன மூலம் அதிக அள வில் பயிர் செய்துள்ளனர். இதுபோல் சொட்டு நீர் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள முருங்கை நன்றாக செழித்து வளர்ந் துள்ளது. இந்த முருங்கை மூலம் ஒரு ஆண்டுக்கு மேலாக காய்கள், கீரைகள் போன்ற வற்றை குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Tags:    

Similar News