உள்ளூர் செய்திகள்

மலை கிராம மக்களுக்கு தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

கொடைக்கானல் அருகே மலை கிராம மக்களுக்கு குடிநீர் வசதி

Published On 2023-09-09 06:17 GMT   |   Update On 2023-09-09 06:17 GMT
  • மூங்கில்பள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
  • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே மேல்மலைகிராமமான மன்னவனூர் பஞ்சாய த்துக்குட்பட்ட மூங்கில்ப ள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு குடிநீர் வழங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீழானவயல் கிராமத்தில் இருந்து பைப் மூலம் மூங்கில் பள்ளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

வனத்துறையினரின் முயற்சியால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தங்களுக்கு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News