உள்ளூர் செய்திகள்

ஓவிய பயிற்சி முகாமில் பங்குபெற்றவர்களை படத்தில் காணலாம்.

தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் பயிற்சி முகாம்

Published On 2022-06-24 04:22 GMT   |   Update On 2022-06-24 04:22 GMT
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி முகாம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி:

மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி முகாம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியை கலை பண்பாட்டுத்தறை மதுரை மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் முன்னிலை வகித்தார்.

5 வயது முதல் 8 வயது உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9 வயது முதல் 12 வயது உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 13 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News