ஊட்டி, குன்னூரில் தி.மு.க. பாக நிலை முகவர்கள் கூட்டம்
- நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.
ஊட்டி,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதகத்துல்லா, மோகன்குமார், பேரூர் செயலாளர்கள் பிரகாஷ், நடராஜ், சதீஷ்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.*
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், நெல்லைக்க ண்ணன், பீமன், லாரன்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம். ராஜு, பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.