உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
- தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.