உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் சதம் அடித்த கத்தரி வெயில்

Published On 2023-05-17 15:14 IST   |   Update On 2023-05-17 15:14:00 IST
  • வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
  • வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் இரவு நேரங்களில் கடுமையான வெப்பமும் அனல் காற்று வீசி வந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக 97 முதல் 98 டிகிரி பாரண்ட்ஹீட் வரை வெயிலின் அளவு நீடித்து வந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 100.4 F ( 38 டிகிரி செல்சியஸ்) குறைந்த பட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

கடுமையான வெயிலின் தாக்கத்தால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. வரும் 29ஆம் தேதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வேர்வை புழக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News