உள்ளூர் செய்திகள்

அரசு கலைக் கல்லூரியில் தீத்தடுப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி

ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்

Published On 2023-03-11 09:44 GMT   |   Update On 2023-03-11 09:44 GMT
  • ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
  • என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News