உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை நகரமன்ற கூட்டம் நடந்தது.

திருவிழந்துார் பெருமாள்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ள மோட்டாரை சீரமைக்க வேண்டும்- நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2023-04-02 08:03 GMT   |   Update On 2023-04-02 08:03 GMT
  • மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
  • பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஜெயலட்சுமி:

அறுபத்தி மூவர் பேட்டை பகுதியில் பாதாளசாக்கடை மேனுவல் திரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது.

பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

விஜய்:

மினிபவர் டேங்க் பழுதுநீக்க கூறினால் ஒப்பந்தகாரரர் ஏற்கனவே செய்ததற்கு பணம் வரவில்லை என்கிறார். பழுதடைந்ததை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஷ்:

மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துகொடுக்க வேண்டும்.

ரமேஷ்:

வடக்குராமலி ங்கத்தெரு சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

காவிரி நடைபாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

கணேசன்:

திருவிழந்துார் பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

அதன்அருகே உள்ள மினி பவர்டேங்க் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.

சர்வோதயன்:

ஸ்டேட்பாங்க் ரோடு, டவுன்க்ஸ்டன்ஷன், பஜனமடைத்தெரு பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

ரத்தின வேல்:

சனிக்கிழமை நகராட்சி 36 வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் என்று துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது.

சம்பத்:

ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் 11 மினிபவர் டேங்குகள் உள்ளது.

அனைத்தும் பழு தாகி உள்ளதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

ஜெயந்தி:

பழுதடைந்ததாக கூறி 2 மினிபவர்டேங்க் மோட்டார்கள் கழற்றி சென்று ஒரு வருடத்திற்குமேலாகியும் அதனை சீர்செய்து பயன்பாட்டிற்கு விடவில்லை.

கல்யாணி:

ஆனந்ததாண்டவபுரம் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் குளம்போன்று தேங்கிநின்று அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.

முடிவில் துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News