உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கீயூட் நுழைவு தேர்வுக்கான அவகாசம் நீட்டிப்பு

Published On 2022-06-23 07:04 GMT   |   Update On 2022-06-23 07:04 GMT
  • மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையால் கீயூட் என்னும் பொது நுழைவு தேர்வை நடத்துகிறது.
  • கீயூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சின்னாளப்பட்டி:

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்புக்கான கீயூட் நுழைவு தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையால் கீயூட் என்னும் பொது நுழைவு தேர்வை நடத்துகிறது. திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் 17 இளங்கலை படிப்புகளில் சேரவும் இந்த கீயூட் நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

இந்த நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி கடந்த மாதம் 22 ம் தேதி முடிவடைந்த நிலையில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருந்ததால் அவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இளநிலை படிப்புகளுக்கான கீயூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இரண்டு நாளில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் திருத்தமும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காந்திகிராம பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் கீயூட் நுழைவு தேர்வு ஜூலை மாதம் 15, 16, 19, 20. ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6, 7, 8, மற்றும் 10 ஆகிய தேதிகளில் கணினிவழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News