உள்ளூர் செய்திகள்

மின்சார ஒயரை மிதித்த மாடு பலி; விவசாயி படுகாயம்

Published On 2023-11-03 15:19 IST   |   Update On 2023-11-03 15:19:00 IST
  • ஊத்தங்கரை அருகே மின்சார ஓயரை மிதித்த மாடு உயிரிழந்தது.
  • விவசாயி மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியப்பன்(வயது70) என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்பொழுது 4 மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல தனது 4 மாடுகளையும் மேய்ச்சலுக்காக விவசாய நிலபகுதிக்கு ஓட்டிக் கொண்டு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின் ஒயரை ஒரு மாடு மிதித்து உள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் வேடியப்பன் மீதும் மின்சாரம் தாக்கியது. அவரை மீட்ட பொதுமக்கள் படுகாயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி சேர்த்துள்ளனர்.

இறந்த மாட்டின் சந்தை மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும். மின்சாரம் தாக்கி மாடு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News