உள்ளூர் செய்திகள்

போடி அருகே கடலை விற்கும் கவுன்சிலர் கலாவதி.

போடி அருகே வாழ்வாதாரத்திற்காக கடலை விற்கும் கவுன்சிலர்

Published On 2022-12-27 10:51 IST   |   Update On 2022-12-27 10:51:00 IST
  • கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
  • தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்குட்பட்டது சிலமலை ஊராட்சி. இங்கு 3-வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை சின்னத்தில் கலாவதி என்பவர் போட்டியிட்டார். அதன்பிறகு தற்போது தி.மு.க ஆதரவு நிலையில் உள்ளார். விவசாய கூலிேவலை பார்த்து வந்த இவர் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

ஆனால் அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் கூறும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை நிைறவேற்ற வலியுறுத்தி ஊராட்சியிடம் தெரிவித்தாலும் எதுவும் நடப்பதில்லை என உணர்ந்து கொண்டார். அதன்பின்புதான் தேர்தல் வெற்றி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதையும் மற்றவர்களுக்கு எப்போதும் உள்ளதைபோலவே இருப்பதையும் உணர்ந்து கொண்டார்.

பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட நிறைவேற்ற முடியாத தன்னால் கவுன்சிலர் ஆனதை நினைத்து ஒருசில சமயங்களில் வேதனையும் அடைந்தார். இந்நிலையில் தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவரை பார்த்தால் கவுன்சிலர் என்றே உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். இவரது கணவரும் இதேபோல சாலையோரத்தில் மொச்சை, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

கடைக்கோடி மக்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கவேண்டும் என்பதை நினைத்து செயலாற்றும் இந்த கால கட்டத்தில் ஒரு பெண் கவுன்சிலரின் கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளத வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News