உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் குன்னூர்-ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்

Published On 2023-08-02 08:11 GMT   |   Update On 2023-08-02 08:11 GMT
  • குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
  • தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மலை ரெயில் இன்று காலை குன்னூரில் இருந்து புறப்பட்டது. அப்போது வெலிங்டன் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது.

இதனை தற்செயலாக பார்த்த ரெயில்வே ஊழியர்கள், உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். எனவே குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மீட்புபடை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு மலைரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News