உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூரில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம்

Published On 2023-04-26 09:58 GMT   |   Update On 2023-04-26 10:01 GMT
  • க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடை பெற்றது.
  • தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோ க்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகரில் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி புதிய செல்போன் செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பாக "ஊர் கேப்ஸ்" என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகி மரிய ஆண்டனி பேசியதாவது:

தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானமும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் அதே நேரத்தில் இருவரும் பேரம் பேசாமல் உரிய கட்டணத்தில் இயக்க ஊர் கேப்ஸ் என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்மார்ட் போனில் புதிய செயலியில் ஆட்டோக்களை இயக்க முன் வந்துள்ளது.

கோவையில் இந்த திட்டம் கடந்த 80 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே போல் தஞ்சாவூர் மாநகரிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு தேவை என பேசினார்.

இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்: தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

தற்போது நாங்கள் சில பேர் மட்டுமே இந்த கூட்டத்துக்கு வந்துள்ளோம்.

எனவே எல்லா ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இந்த திட்டம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் அதற்கான முடிவை தெரிவிக்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News