உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-12-17 08:40 GMT   |   Update On 2022-12-17 08:43 GMT
  • நான்கு வழிச் சாலைப்பணிக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
  • தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

ஆலங்குளம்:

நெல்லை- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்கு கூடுதல் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

நான்குவழிச்சாலைப் பணிகள் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்கள் கையகப் படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரணமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு கூடுதல் இடங்கள் தேவைப் படுவதால் அவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஆட்சேபனைகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் பகுதி 2, திருச்சி நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நிலம் வைத்திருக்கும் அழைப்பானை கொடுக்பட்ட உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.

இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகம் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என கடிதம் அளித்தனர்.

Tags:    

Similar News