கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ராணுவ வீரர் பிரபு மரணமடைந்ததையடுத்து அவரது குடும்பத்தினரை ஓய்வு பெற்ற ராணுவீரர் நலசங்க மாநில தலைவர் பழனியப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஒய்வு பெற்ற ராணுவ வீரர் நல கூட்டமைப்பின்சார்பில் ஆறுதல்
- தகராறில் காயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு மரணம் அடைந்தார்.
- ஒய்வு பெற்ற ராணுவ வீரர் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பேரூராட்சி, வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் நடந்த தகராறில் காயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு மரணம் அடைந்தார்.
அவரது வீட்டிற்கு ஒய்வு பெற்ற ராணுவ வீரர் நல கூட்டமைப்பின் மாநில தலைவர்பழனியப்பன் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரபு குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். மேலும் அவர்கள் தங்களது குடும்ப வாழ்வாதரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எங்கள் சங்கம் சார்பாக துறை சார்ந்த அலுவலர் களுக்கு கோரிக்கை மனுவாக ஏற்கனவே வழங்கியுள்ளோம். கோரிக்கையை பரிசீலிப்ப தாக அரசுத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இங்கு நடைபெற்ற இது போன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடக்க கூடாது. மேலும் இச்சம்பவத்தை அரசியல் ரீதியாக அணுக கூடாது. தற்போது அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விதவை நலகூட்டமைப்பின் மாநில தலைவர் தீபா மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.