உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பழைய பேட்ைட ஐ.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்து மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த காட்சி.

நியாய விலைக்கடை, மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-10-19 15:37 IST   |   Update On 2023-10-19 15:37:00 IST
  • கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை, மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
  • வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பேட்டை ஐஇஎல்சி நடுநிலைப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி போகனப்பள்ளி நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஐ.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.

போகனப்பள்ளி நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டை தாரர்களின் விபரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடி மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு, விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப் படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் நடத்தப்படும் பாடத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News