மெட்டூர்-ஒட்டன்சத்திரம் 4 வழிச்சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
மெட்டூர்- ஒட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு
- மெட்டூரில் இருந்து பழக்கனூத்து, ஒட்டன்சத்திரம் வழியாக தாராபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
- பணிகளை பொறியாளர் ஆய்வு செய்து விரைந்து முடிக்கவும், உரிய சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செம்பட்டி:
திண்டுக்கல் அருகே மெட்டூரில் இருந்து பழக்கனூத்து, ஒட்டன்சத்திரம் வழியாக தாராபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் காமலாபுரம் அருகே மெட்டூர் முதல் கன்னிவாடி வரை நடைபெறும், முதல்-அமைச்சரின் 4 வழிச்சாலைத் திட்டப்பணிகளை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் (சென்னை) சந்திரசேகர் செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரத்தில் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்கவும், உரிய சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவும், பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (மதுரை) கண்காணிப்புப் பொறியாளர் மாரிமுத்துராஜன், கட்டுமான மற்றும் பராமரிப்பு (திண்டுக்கல்) கோட்டப் பொறியாளர் பரணிதரன்,
தரக்கட்டுப்பாடு (மதுரை) ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் (ஆத்தூர்) கண்ணன், வத்தலகுண்டு வீரன் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.