உள்ளூர் செய்திகள்
வளசரவாக்கம் அருகே செல்போன் திருடிய ஆந்திர வாலிபர் கைது
- ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
- தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
போரூர்:
வளசரவாக்கம், அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தொழிலாளர்கள் முதல் தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த செல்போன்களை திருடினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிம்மாச்சலம் என்கிற சிவா (வயது23) என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். சிவா மீது ஏற்கனவே பாண்டி பஜார், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.