உள்ளூர் செய்திகள்

வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்தபடம்.

கால்நடை தீவனம் வைக்கோல் தீயில் எரிந்து நாசம்

Published On 2023-04-13 15:43 IST   |   Update On 2023-04-13 15:43:00 IST
  • இரவு வைத்த தீ நேற்று மதியம் வரை இருந்த நிலையில் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் போர் மீது தீப்பொறி விழுந்துள்ளது.
  • தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி அடுத்த சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு 5 பசு மாடுகளும், 5 ஆடுகள் என கால்நடைகள் வைத்து பராமரித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் சுமார் 60 ஆயிரம் மதிப்பில் வாங்கி தனது வீட்டின் அருகே அடுக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் இரசு நேரங்களில் கொசு தொல்லை அதிகம் என்பதால் வீட்டின் அருகே தீ வைத்து புகை ஏற்படுத்தி கால்நடைகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெப்பம் அதிகமாக வாட்டி வதைத்து வந்தது. இரவு வைத்த தீ நேற்று மதியம் வரை இருந்த நிலையில் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் போர் மீது தீப்பொறி விழுந்துள்ளது.

இதில் வைக்கோல் தீயில் எரிய தொடங்கியது. அருகே இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அருகே இருந்தவர்களின் உதவியோடு வீட்டிற்குள் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அணைக்க முயன்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமடைந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வெளியே யாரும் வைக்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்தள்ளனர்.

Tags:    

Similar News