உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தியதாக 4 பேர் மீது வழக்கு

Update: 2022-07-02 04:21 GMT
  • குழந்தையை கடத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 30). இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களது மகளான நிலவரசி (7) என்பவர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மகளை தந்தையுடன் இருக்குமாறு கூறி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலவரசி கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நிலவரசியை அழைத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஜோதிபாசுக்கு தகவல் கிடைக்கவே அவர்களது வீட்டுக்கு சென்று நிலவரசியை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் சரியான பதில் சொல்லாமல் இருந்து விட்டனர். இதனால் தனது மகளை கடத்திச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் செல்வி, கருப்பசாமி, கிருஷ்ணம்மாள், சிவக்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News