உள்ளூர் செய்திகள்

இந்திய விமான படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்- தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2023-08-11 14:47 IST   |   Update On 2023-08-11 14:47:00 IST
  • திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

2023-24-ம் ஆண்டில் இந்திய விமான படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு கடந்த 27-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 தேதி முதல் 27.12.2006 தேதி வரை பிறந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் ஆங்கிலம் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகள் எடுத்து 50 சதவீத மதிப்பெண்க ளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடை யவர் ஆவர்.

இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு முதற்கட்டமாக ஆன்லைன் வாயிலாக https:// agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை 6380089119 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News