உள்ளூர் செய்திகள்

கடையம் வியாபாரிகள் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர் முருகேசனை, நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.


கடையம் வியாபாரிகள் சங்க தலைவராக தொழிலதிபர் முருகேசன் தேர்வு

Published On 2022-11-22 14:45 IST   |   Update On 2022-11-22 14:45:00 IST
  • கடையத்தில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
  • மறைந்த வியாபாரிகள் சங்க தலைவர் சந்தோஷ் நாடார் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடையம்:

கடையத்தில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மறைந்த வியாபாரிகள் சங்க தலைவர் சந்தோஷ் நாடார் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் புதிய தலைவராக செயற்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தொழிலதிபர், ஸ்ரீநாத் ஏஜென்சி மற்றும் கே.எஸ்.எம்.நடராஜ நாடார் கீழமரக்கடை உரிமையாளர் முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News