உள்ளூர் செய்திகள்

இடியும் நிலையில் உள்ள பஸ் நிலைய கட்டிடத்தை படத்தில் காணலாம். 

சின்னசேலத்தில் இடிந்து விழும் நிலையில் பஸ் நிலைய கட்டிடம்

Published On 2022-08-04 12:59 IST   |   Update On 2022-08-04 12:59:00 IST
  • சின்னசேலத்தில் பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  • இந்த கட்டிட சுவர் மக்கள் நடமாடும் பொழுது அவர்களின் தலையில் அடிப்பட்டு உயிர் சேதம் ஆவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

சின்னசேலம்,ஆக.4-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் மேல் பகுதியில் உள்ள சுவரில் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் கட்டிடம் முழுவதும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2003-ம் ஆண்டு அப்பொழுது இருந்த மாவட்ட கலெக்டர் கோபால் தலைமையில் அதிமுக வின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத் உணவுத்துறை அமைச்சராக இருந்த பா. மோகன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. பழைய கட்டிடம் என்பதாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பேருந்து நிலையத்தின் கட்டிடத்தில் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பர்கத் உணவகம் கட்டிடத்தின் மேலே பெரிய அளவில் விரிசல் அடைந்திருக்கிறது.

சின்னசேலம் பகுதி மக்கள், கிராம மக்கள் என தினமும் ஏராளமானோர் அவ்வழியாக சென்று வருகின்றனர். அதுபோக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பை முடித்துவிட்டு பஸ் நிலையத்தில் இருந்து தான் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மரங்களால் விரிசல் ஏற்பட்ட கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம் என்ற அச்சத்தில் மக்கள் பேருந்து நிலையத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கட்டிட சுவர் மக்கள் நடமாடும் பொழுது அவர்களின் தலையில் அடிப்பட்டு உயிர் சேதம் ஆவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்ன தாகவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மரங்கள் வளர்ந்து விரிசல் அடைந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News