உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாலம் கட்டுமான பணிகள் - அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-06-16 10:04 GMT   |   Update On 2022-06-16 10:04 GMT
  • 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.
  • இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த கல்லணைக் கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.

இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் கட்டப்பட்ட இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

இந்த நிலையில்மற்றொரு பாலத்தை கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News