உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு : பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

Published On 2023-11-02 05:45 GMT   |   Update On 2023-11-02 05:45 GMT
  • பா.ஜ.க. சார்பாக மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • போலீசார் தடுத்ததால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்:

பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சியின் கொடி க்கம்பம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொட ர்ந்து மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்ப டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்த லைவருமான ராஜ பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். கொடிக்கம்பம் நட அனுமதி இல்லாததால் அவர்களை போலீசார் கலைந்து போகுமாறு கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரி வித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜ பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. வினரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News