உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

Published On 2023-01-12 09:13 GMT   |   Update On 2023-01-12 09:13 GMT
  • கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
  • கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். மேலும் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி சாமி கும்பிட்டு செல்வார்கள். 

பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில் கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை எவ்வளவு நகை, வெள்ளி பொருட்கள், பணம் என்பது தெரியவரும். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடைசியாக உண்டியல் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News