புதிய ஊராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வள்ளுவக்குடியில், புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட பூமிபூஜை
- வள்ளுவக்குடியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
- ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.
சீர்காழி:
சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதம் ஏற்பட்டிருந்தது.
இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் படி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.42லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் முருகன், ஊரட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.