உள்ளூர் செய்திகள்

பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்த குழந்தை யோகானந்தஸ்ரீ.

வாழப்பாடியில் பரதநாட்டிய அரங்கேற்ற கலை விழா

Published On 2022-06-14 07:07 GMT   |   Update On 2022-06-14 07:07 GMT
வாழப்பாடியில் பரதநாட்டிய அரங்கேற்ற கலை விழா நடைபெற்றது.

வாழப்பாடி:

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, லதா நாட்டியாலயா இசைப்பள்ளி சார்பில், வாழப்பாடியில் முதன்முறையாக பரதநாட்டியம் மற்றும் குரலிசை, இசைக்கருவிகள் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

விழாவிற்கு, பரதநாட்டிய இசைப்பள்ளி ஆசிரியை லதா வெங்கடேஷ் வரவேற்றார். வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.

வாழப்பாடி இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி, இலக்கிய பேரவை செயலர் சிவ.எம்கோ, அரசு மருத்துவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், பரதநாட்டியம், குரலிசை, இசைக்கருவிகளை வாசித்து, குழந்தைகள் அரங்கேற்றம் செய்தனர்.

முறையாக பயிற்சி பெற்று நேர்த்தியாக அரங்கேற்றம் செய்த குழந்தைகளுக்கு, சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடாசலம், தாண்டவராயன், கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் சீனிவாசன், மா. கணேசன், கடலூர் மாவட்ட ஆரிய வைசிய மகாசபை நிர்வாகி வினோத்குமார், தனுஷா ஆகியோர், வளர் கலைமணி விருது மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முன்னதாக வாழப்பாடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சலங்கை பூஜை நடைபெற்றது.

இவ்விழாவில், காங்கிரஸ் பிரமுகர் அத்தனூர்பட்டி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமாரி சரவணன், சிங்கிபுரம் விவசாயக் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லதா நாட்டியாலயா இசைப்பள்ளி பயிற்றுநர் லதா வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News