உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற மாணவன் தமிழ்செல்வனுக்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கிய காட்சி.


பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவணுக்கு நிதிஉதவி

Published On 2023-09-03 10:09 GMT   |   Update On 2023-09-03 10:09 GMT
  • பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவணுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.
  • பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவன் நீட் தேர்வில் 558 மதிப்பெண்கள் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் தமிழ்செல்வன். இவர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயின்று வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழ்செல்வன் நீட் தேர்வுக்காக பயின்று வந்தார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 720க்கு 558 மதிப்பெண் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு பாரத் பள்ளியின் சார்பில் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டது. தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளார்.

மேலும் அந்த மாணவன் தனது தந்தையை இழந்து ஏழ்மை நிலையில் உள்ளதை அறிந்து மாணவனுக்கு கல்லூரியின் சேர்க்கைக்காக பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் மணி ரூ.50 ஆயிரம் நிதிஉதவி மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தினார்.

மேலும் அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மருத்துவ படிப்பு முடித்து ஏழை மக்கள், ஊனமுற்றோர் மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பான சேவை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் மற்றும் துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News