உள்ளூர் செய்திகள்

சாய் தேசம் சீரடி சாய்பாபா கோவிலில் பந்தக்கால் முகூர்த்த விழா

Update: 2022-08-11 10:47 GMT
  • சாய் தேசம் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா கோவிலில் வருகிற 8.9.22 அன்று நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.
  • சிவாச்சாரியர் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தமும், விநாயகர், தத்தாத்ரேயர் கோவில்களுக்கு நிலை முகூர்த்தமும் நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி- நாகை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சாய் தேசம் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா கோவிலில் வருகிற 8.9.22 அன்று நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.

முதலில் பாபா பாதத்தில் பல வரிசை தட்டுகளை வைத்து ஆரத்தி எடுத்து பின்னர் காடந்தேத்தி கோவில் சிவாச்சாரியர் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தமும், விநாயகர், ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில்களுக்கு நிலை முகூர்த்தமும் நடத்தப்பட்டது.

இதில் கோவில் திருப்பணி செய்து வரும் ஸ்ரீராம் உலக ரட்சகர் ஸ்ரீரடி சாய்பாபா அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாகியுமான தொழிலதிபர் ஆர்.வி.கருணாநிதி, துணைத் தலைவர் ஆடிட்டர் எல்.ராகவன், செயலாளர் ஆர்.வி.ராஜேந்திரன், இணை செயலாளர் ஆர். சீனிவாசன், பொருளாளர் கே ராம் பிரசாத்.

அறங்காவலர்கள் திருத்துறைப்பூண்டி நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன், கவுன்சிலரும், தி.மு.க நகர செயலாளருமான பாண்டியன், அரசு ஒப்பந்தக்காரர் ஓம்சக்தி கண்ணன், திருத்துறைபூண்டி கிறிஸ்துவ சமுதாய தலைவர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப். ஹாஜாமைதீன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News