உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி

Published On 2023-10-13 15:22 IST   |   Update On 2023-10-13 15:22:00 IST
  • கிருஷ்ணகிரியில் பெண் வீராங்கனைகளின் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.

 பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பெண் வீராங்கனைகளின் மாபெரும் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி தொடங்கி உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் (ஸ்ரீநகர்), மேகாலாயா (சில்லாங்), தமிழ்நாடு கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் இருந்து தொடங்கி 75 மோட்டார்சைக்கிளில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள், 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.

கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த வாகன பேரணி நேற்று கிருஷ்ணகிரி வந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சரயு, மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை தலைவர் இமான்ஸ்சுகுமார் ஆகி யோர் வரவேற்று வாகன பெண் வீராங்க னைகளுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை யாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் துணை ராணுவ படையின் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் வெங்கடராமன், சி.ஆர்.பி.எப் கமாண்டோ குரூப் துணை ஆய்வாளர் வீரபத்திரன், கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஆர்.பி.எப். கமாண்டோ குரூப் மற்றும் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரிப்பட்டணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தருமபுரி ஜவான்ஸ் குரூப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்

Similar News