ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பழங்குடியினர் மீது தாக்குதல்: தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
- தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
அரூர்,
கோட்டப்பட்டி அருகே மலைவாழ் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சரடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி பத்திர பதிவு குறித்து கேட்டறிந்த மலைவாழ் பழங்குடியினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனவே, புதுக்கோட்டை சரடு கிராமத்தில் பழங்குடி யின மக்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவ ணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திர பதிவினை ரத்து செய்ய வேண்டும்.
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படும் கோட்டப்பட்டி காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், மாநில செயலர் ஸ்ரீராமன், மாநில துணைச் செயலர் பழனி, மாநில பொருளர் குப்புசாமி, இளைஞரணி தலைவர் இளையராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.