ஆத்தூர் பஸ்நிலையத்தில் திருடர்கள் அட்டகாசம் போலீஸ் நடவடிக்கை பாயுமா?
- பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்ல வேண்டும்.
- இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவு, பகல் நேரங்களில் அந்த வழியாக செல்வோரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சேலம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் செல்லும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்ல வேண்டும். தொடர் மழையின் காரணமாக கோட்டை, வடக்கு காடு, முல்லைவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்வோர், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவு, பகல் நேரங்களில் அந்த வழியாக செல்வோ ரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
நேற்று ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் என்பவரிடம் பிக்பாக்கெட் திருடன் கைவரிசை காட்டி யுள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பணத்தை திருடி சென்று விட்டான். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எனவே அந்த பகுதியில் போலீசார் முறையாக கண்காணிப்பு செய்து, திருட்டை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.