உள்ளூர் செய்திகள்

வழக்கம்போலவே பல்லாங்குழிகளாக மாறிய சாலைகள்

Published On 2023-06-20 09:00 GMT   |   Update On 2023-06-20 09:00 GMT
  • மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.
  • போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய வெளுத்துகட்டிய மழை பகலில் கொஞ்சம் ஓய்வு கொடுத்து நேற்று இரவிலும் சில இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.

ஒரேநாள் மழையை தாக்குபிடிக்க முடியாமல் பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழிகள் போல் காட்சியளிக்கின்றன. வளசரவாக்கம், மதுரவாயல், ஏரிக்கரை ஆழ்வார்திருநகர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோடம்பாக்கம் உள்பட பல இடங்களில் சாலைகள் படுமோசமாக உள்ளன.

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்காமல் இருப்பதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். பலர் கீழே விழுகிறார்கள்.

சைக்கிளில் பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் குழிகளில் விழுந்து தடுமாறி விழுகிறார்கள். கை, கால்களில் காயங்களுடன் பரிதாபமாக செல்கிறார்கள். மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.

மெயின்ரோடுகள் பார்க்க பகட்டாக தெரிந்தாலும் உட்புற சாலைகள் படுமோசமாக உள்ளன. போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

Tags:    

Similar News