உள்ளூர் செய்திகள்

அரியலூரில் ரேஷன் குறைதீர் கூட்டம்

Published On 2023-08-13 11:44 IST   |   Update On 2023-08-13 11:44:00 IST
  • அரியலூர் மாவட்டம் சிறுவளூர், வெண்மான்கொண்டான் கிழக்கு, இரும்புலிக்குறிச்சி, வரதராசன்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
  • தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளித்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் சிறுவளூர், வெண்மான்கொண்டான் கிழக்கு, இரும்புலிக்குறிச்சி, வரதராசன்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,தனித்துறை ஆட்சியர், பொது விநியோக துணை ஆட்சியர் ஆகியோர் தலைமை வகித்தனர். மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.மேலும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளித்தனர்.

Tags:    

Similar News