உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-06-28 15:14 IST   |   Update On 2022-06-28 15:14:00 IST
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மா வட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.

இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் 0 முதல் 6 வயது வரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு ரூ.55,600 மதிப்பில் காதொலிக் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.



Tags:    

Similar News