உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி தொடக்கம்

Published On 2022-06-25 09:15 GMT   |   Update On 2022-06-25 09:15 GMT
  • அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

அரியலூர்:

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், ரத்த வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்பு கருவி இயக்கி வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விழாவில் பங்கேற்று, ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டர், வென்டிலேட்டர் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.

முழு உடல் பரிசோதனையில் அனைத்து இரத்தம், இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை தொகுப்பாக பரிசோதனை செய்யப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில்; பரிசோதனை செய்தால் ரூ.3750/- வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.250/- மட்டும் செலுத்தி பொதுமக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெறலாம்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள்கண்ணன், மலர்மன்னன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News