உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Published On 2022-07-17 15:33 IST   |   Update On 2022-07-17 15:33:00 IST
  • தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வருகிற 28.07.2022 அன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது
  • அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 28.07.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் பள்ளி மாணவர்களுக்குத் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுவழங்கப்படும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

இவை அல்லாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

இப்போட்டியானது காலை 10 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News